ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டிணத்தில் சிறுமி ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னுடைய தந்தை என்னை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக ஆசிரியர்களிடம் புகார் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த ஆசிரியர்கள் அவரது பெற்றோரை வரவழைத்து விசாரணை நடத்தியபோது அவர் உண்மையை ஒப்புக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக ஆசிரியர்கள் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். இந்த புகாரின்படி காவல்துறையினர் சிறுமியின் தந்தையைக் கைது செய்தனர். அதனை தொடர்ந்து அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், “சில மாதங்களுக்கு முன்பு மாணவி செல்போனில் அதிக நேரம் பேசியுள்ளார். இதனால் கோபமடைந்த தந்தை மாணவியை மிரட்டி அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.
அதுமட்டுமல்லாமல் உடல் நலக்குறைவு காரணமாக அவரது மனைவி 5 மாதங்களுக்கு முன்பு தாய்வீட்டிற்கு சென்றுள்ளார். இதன் காரணமாக மாணவி தந்தையுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் தந்தையின் தொல்லை தாங்க முடியாமல் ஒருகட்டத்தில் மனஉளைச்சல் அடைந்த அவர் ஆசிரியர்களிடம் புகார் கூறியுள்ளார்” என்று விசாரணையில் தெரியவந்துள்ளது.