உத்திரபிரதேசத்தின் பெற்ற மூன்று குழந்தைகளை தவிக்க விட்டு 29 வயதுடைய தாய் 16 வயது சிறுவனுடன் தப்பி ஓடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
உத்திரப்பிரதேச மாநிலம் ,கோரக்பூர் என்ற பகுதியில் இளம் தம்பதியினர் வசித்து வந்துள்ளனர். இருவருக்கும் கடந்த 6 வருடத்திற்கு முன் திருமணம் நடந்த நிலையில், தற்போது இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளது. இவர்கள் இருவரும் குடும்ப வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த ,16 வயதுடைய சிறுவன் ஒருவன் இந்த 29 வயதுடைய மனைவி, இருவருக்கும் நட்பாகி பழக்கம் ஏற்பட்டு வந்தது. இருவரும் வயது வித்தியாசமின்றி மிக நெருக்கமாக பழகி வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் கணவனுக்கு சற்று சந்தேகம் ஏற்பட்டதால் மனைவியிடம் மேலோட்டமாக அதை தெரிவித்தார்.
ஆனால் இதைக் கண்டு கொள்ளாத மனைவி வழக்கம்போல், அந்த சிறுவனுடன் நெருங்கி பழகி வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் சிவராத்திரி தினத்தை முன்னிட்டு, சிவராத்திரி விழா அப்பகுதியில் நடைபெற்றுள்ளது. எனவே இந்த நிகழ்வை பயன்படுத்திக்கொண்டு ,அந்த 29 வயது மனைவியும் 16 வயது சிறுவனும் தப்பி ஓடிச் சென்றனர். இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த இருவரின் குடும்பத்தினர் ,அவர்களை தேடி பார்த்தனர். ஆனால் அவர்கள் இருவரும் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. இதன் காரணமாக சிறுவனின் குடும்பத்தார் காம்பீர்கஞ்ச் பகுதி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.
இந்த புகாரின் பெயரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ,அந்தப் பெண்ணின் மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு, செய்து விசாரணையில் ஈடுபட்டனர். விசாரணை போது ,இவர்கள் இருவருக்கும் கடந்த ஒரு வருட காலமாக பழக்கம் இருந்தது தெரிய வந்தது. ஆனால் இவர்களின் வயது வித்தியாசம் காரணத்தினால், அக்கம் பக்கத்தினருக்கு சந்தேகம் ஏற்படவில்லை ,என்று போலீசார் தெரிவித்தனர். இதைப்பற்றி பாதிக்கப்பட்ட கணவன் கூறும்போது, ‘என்னுடைய மனைவி இப்படி நடந்து கொள்வார் என்று நான் கனவிலும் நினைத்ததில்லை ‘என்று கண்ணீர் மல்க கூறினார். இதனால் 29 வயதுடைய மனைவி தன் மூன்று குழந்தைகளையும் தவிக்க விட்டுச் சென்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.