Categories
ஆன்மிகம் கிறிஸ்த்து

பெலன் பெருவதற்க்கான… 8 வசனங்கள் இதோ…!!!

என்னை பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்  செய்ய எனக்குப் பெலனுண்டு. (பிலிப்பியர் 4 :13)

நீங்கள் பலங்கொண்டு திடமனதாயிருகள் அவர்களுக்குப் பயப்படவும் திகைக்கவும் வேண்டாம்; உன்  தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னை  கைவிடுவதுமில்லை. (உபாகமம் 31: 6)

நீ பயப்படாதே நான் உன்னுடனே  இருக்கிறேன் ; திகையாதே,  நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினுல் உன்னைத்  தாங்குவேன். (எசாயா 41: 10)

கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே , நீங்களெல்லாரும் திடமனதாயிருங்கள், அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப் படுத்துவார் . (சங்கீதம். 31 :24)

கர்த்தர் என் பெலனும் என் கீதமுமானவர்;  அவர் எனக்கு இரட்சிப்புமானவர்; அவரே என் தேவன், அவருக்கு வாசஸ்தலத்தை ஆயத்தம் பண்ணுவேன்; அவரே என் தகப்பனுடைய தேவன், அவரை உயர்த்துவேன். (யாத்திராகமம் 15: 2)

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே!  நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள் நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். (7 மத்தேயு 11: 28)

கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புது பெலன் அடைந்து, கழுகுகளை போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளேப்படையார்கள்,  நடந்தாலும் சோர்ந்து போகார்கள் . (ஏசாயா  40: 31)

முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்.  (மத்தேயு  6 : 33)

Categories

Tech |