Categories
கிரிக்கெட் விளையாட்டு

“பெஸ்ட் கேப்டன்” CSK வெற்றிக்கு இது தான் காரணம்….. ஆஸி வீரர் புகழாரம்…!!

நேற்று முன்தினம் சென்னை அணி வெற்றி பெற்றது குறித்து ஆஸ்திரேலியா வீரர் கருத்து தெரிவித்துள்ளார். 

ஐபிஎல் 2020 சீசன் போட்டியில், சிஎஸ்கே தொடர் தோல்வியை தழுவி வந்த சமயத்தில், பலர் அந்த அணியை  கிண்டல் கேலி செய்து, சமூக வலைதளங்களில் தொடர்ந்து பதிவிட்டு வந்தனர். இதையடுத்து நேற்று முன்தினம், சிஎஸ்கே பிரம்மாண்ட வெற்றி பெற்றது haters அனைவருக்கும் வாயடைத்துப் போய் விட்டது. இது குறித்து பலரும் தங்களது சமூக வலைதளங்களில் சிஎஸ்கே அணியையும், தல தோனியையும் பாராட்டி பல்வேறு பதிவுகளை பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில்,

தோனியின் சிறப்பு, வீரர்கள் மேல் அவர் வைத்திருக்கும் நம்பிக்கை தான் என முன்னாள் வீரர் பிராட்லி தெரிவித்துள்ளார். தொடர்ந்து மூன்று போட்டிகளில் தோல்வியை தழுவிய பிறகும், சிஎஸ்கே அணியில் எந்தவித மாற்றமும் இல்லை. தோனி  நம்பியது போலவே, வாட்சன் , பிளசி  விக்கெட்டுகளை விடாமல், அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர் என கூறியுள்ளார். 

 

Categories

Tech |