Categories
மாநில செய்திகள்

பொங்கல் பரிசு தொகுப்பு…. ரேஷன் அட்டைதாரர்களுக்கு…. வெளியான குட் நியூஸ்….!!!!

பொங்கல் பரிசு தொடர்பாக முக்கிய தகவல் ஒன்றை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் கடைகளிலும் 21 பொருட்கள் இலவசமாக வழங்கப்படும் என்று முதல்வர் முக ஸ்டாலின் தெரிவித்திருந்தார், அதற்கான பொருட்களை பேக்கிங் பணி தற்போது தொடங்கி தீவிரமாக நடைபெற்று வருகின்றது. கரும்பு, பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், பாசிப்பருப்பு, நெய் போன்ற பொருட்களும், பண்டிகைக் கால சமையலுக்குத் தேவையான மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கடுகு, சீரகம், மிளகு, புளி, கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, ரவை, கோதுமை மாவு, உப்பு ஆகிய மளிகைப் பொருட்களும் அடங்கிய துணிப்பை வழங்கப்பட உள்ளது. 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்குவதற்கு 1,088 கோடி ரூபாயும், கரும்பு வழங்குவதற்காக 71 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

ஜனவரி 3 ஆம் தேதி முதல் அனைத்து ரேஷன் கடைகள் மூலம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் 14 பொருட்கள் வழங்கப்பட்டபோது பெரும்பாலான கார்டுதாரர்கள் முந்திரிப்பருப்பு கிடைக்கவில்லை. பொருட்களை வாங்கிய பிறகு வீட்டில் சென்று பார்த்து குறைந்த பொருள்கள் உள்ளதை மீண்டும் கேட்டு வந்தால் ரேசன் ஊழியர்கள் தர மறுக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு வந்தது.

இந்நிலையில் தமிழக அரசின் சார்பில் வழங்கப்படும் 21 வகையான பொங்கல் பரிசு தொகுப்பில் பொருட்கள் ஏதாவது விடுபட்டால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் எண்ணிற்கு புகார் தெரிவிக்கலாம். இதுதொடர்பாக மாவட்ட வாரியாக புகார் எண்களும் அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பில் உள்ள அனைத்து பொருள்களும் சென்றடைவதை உறுதி செய்ய வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கூட்டுறவுத் துறை வலியுறுத்தியுள்ளது.

Categories

Tech |