தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தேர்வு மே 5-ஆம் தேதி தொடங்கி 28-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மேலும் 10 மற்றும் 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளும், மே மாதம் தொடங்கி மே 31 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. மேலும் இதற்கான தேர்வு முடிவுகள், ஜூன் மற்றும் ஜூலை மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை மற்றும் தேர்வு துறையானது இந்த பொதுத் தேர்வுக்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
மேலும் பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தற்போது செய்முறை தேர்வு நடந்து வரும் சூழலில், மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர். இதையடுத்து சுமார் 30 லட்சம் மாணவர்கள், மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வு எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 10 மற்றும் பிளஸ் 1 ,பிளஸ் 2 வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுக்கு கேட்கப்படும் வினாக்களானது, குறைக்கப்பட்ட பாடங்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என தேர்வுத் துறை தெரிவித்துள்ளது.
மேலும் இது தொடர்பாக தேர்வுத் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது, 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. ஆகவே இந்தத் தேர்விற்கான வினாக்கள் 2021 – 2022 ஆம் கல்வி ஆண்டிற்கு மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலம் வழங்கப்பட்ட முன்னுரிமை பாடத் திட்டத்தில் (Priority Syllabus – குறைக்கப்பட்ட) உள்ள பாடங்கள் முழுவதிலிருந்தும் கேட்கப்படும் எனவும் இப்பாடத்திட்ட விவரங்கள் குறித்து http://dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Notification என்ற பகுதியில் வெளியிடப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.