Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

பொது போக்குவரத்துக்கு அனுமதி ? முதல்வர் ஆலோசனை தொடங்கியது …!!

பொது முடக்கத்தை நீட்டிப்பதாக இல்லையா என்பது குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை நடைபெறுகிறது.

நாளைய தினம் வெள்ளிக்கிழமை 31ஆம் தேதியுடன் தமிழக்தில் ஊரடங்கானது நிறைவடைய இருப்பதை ஒட்டி இன்றைய தினம் மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டிருக்கிறார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி. இந்த கூட்டம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகின்றது. தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு கொரோனா வைரஸ் தொற்றானது 6900 என்ற அளவில் பாதிவாகி வருகின்றது.

நேற்றைய தினத்தில் கூட இத அளவில் 7000த்தை நெருங்கும் வகையில் இந்த பாதிப்பானது இருக்கிறது. ஒட்டுமொத்தமாக பார்த்தோம் என்றால் இரண்டு லட்சத்து 27 ஆயிரம் பாதிப்புகள் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கிறது. தற்போது  மருத்துமனையில் சிகிச்சை பெற்றுவரும் கூடிய 57 ஆயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் இருக்கின்றது.

மாவட்டங்களில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரக்கூடிய காரணத்தினால் தமிழகத்தில் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் ஆகியவை குறித்து இன்றைய தினம் முதலமைச்சர் மாவட்ட ஆட்சியர்களுடன் கேட்கிறார். குறிப்பாக பொது போக்குவரத்தை செயல்படுத்துவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்படுகிறது.

Categories

Tech |