சென்னையில் மெட்ரோ ரயிலில் தினம் தோறும் மாணவர்கள் கத்தி மற்றும் கற்கள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் மோதிக் கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் மாணவர்களுக்கு பல எச்சரிக்கை மற்றும் கைது நடவடிக்கைகள் எடுத்த போதிலும் மாணவர்களின் அட்டகாசம் அடங்கவில்லை.இந்நிலையில் மாணவர்கள் பட்டாகத்திகளை நடைமேடையில் தேய்த்தபடி செல்வது போன்ற வீடியோ காட்சிகள் மீண்டும் சமூக வலைத்தளத்தில் வைரலாகி பரபரப்பை கிளப்பியுள்ளது.
கல்லூரி முடிந்து மாலை நேரத்தில் சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் புறநகர் ரயிலில் செல்லும் சுமார் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கட்டில் கும்பலாக நின்று கொண்டுள்ளனர். அவர்கள் கத்திவாக்கம்,அத்திப்பட்டு புதுநகர் மற்றும் அத்திப்பட்டு ரயில் நிலையங்களில் நடைமேடையில் மின்சார அறையில் வந்ததும் மாணவர்கள் சிலர் தாங்கள் வைத்திருந்த பட்டாக்கத்தியை நடைமேடையில் உரசி செல்கின்றனர்.அதனைக் கண்டு ரயிலில் இருந்த பயணிகள் மட்டும் நடைமேடையில் இருந்த பயணிகள் அனைவரும் அதிர்ச்சி அடைந்தனர்.