Categories
உலக செய்திகள்

என்னோட நம்பிக்கை…. கொரோனாவை ஒழிக்க முடியாது….. முன்னணி தொற்று நோய் நிபுணர் கருத்து….!!

அமெரிக்காவின் முன்னணி தொற்று நோய் நிபுணர் கொரோனா குறித்து கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

சீனாவின் ஹூகான் மாகாணத்தின் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் இன்று  உலக அளவில் மிகப் பெரிய அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது.  இதனுடைய பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக  உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில்,

இத்தாலி போன்ற நாடுகள்  கொரோனாவின்  கோரப்பிடியில் சிக்கி இருந்த நிலையில், தற்போது அதிலிருந்து மீண்டு எழுந்து விட்டது. இருப்பினும் இந்தியா, பிரேசில்,அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் கொரோனாவில்  இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. தற்போது கொரோனா குறித்த முக்கிய அறிவிப்பை அமெரிக்காவின் முன்னணி தொற்றுநோய் நிபுணர் டாக்டர் அந்தோணி பவுசி கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார். அதில்,

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா  வைரஸ் மிகவும் கொடியது. வேகமாக பரவக்கூடியது. அதனை ஒழிப்பதற்காக நாம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளால் அதனை கட்டுப்படுத்த மட்டுமே முடியும். ஒழிக்க ஒருபோதும் முடியாது. இந்தகொரோனாவை  ஓரளவுக்கு கட்டுப்படுத்துவதும் அடுத்த வருடம்  தான் சாத்தியம் என்று தான் நம்புவதாக தெரிவித்துள்ளார்.

Categories

Tech |