Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

பேக்கரிக்குள் புகுந்த லாரி… அடுத்தடுத்த மோதிய 6 வாகனங்கள்… நாமக்கல்லில் கோர விபத்து…!!

நாமக்கல்-திருச்சி சாலையில் அடுத்தடுத்து 6 வாகனங்கள் விபத்திற்குள்ளான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் மோகனூரை அடுத்துள்ள என். புதுபட்டியில் உள்ள நாமக்கல்-திருச்சி சாலையில் பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகின்றது. இந்நிலையில் சம்பவத்தன்று இரவு 10 மணி அளவில் அப்பகுதி வழியாக சென்று கொண்டிருந்த சரக்கு ஆட்டோ டிரைவர் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு அந்த பேக்கரியில் டீ குடிக்க சென்றுள்ளார்.

அப்போது அந்த பகுதியில் திருச்சியை நோக்கி சென்று செங்கல் பாரம் ஏற்றி சென்றுகொண்டிருந்த லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்றுகொண்டிருந்த சரக்கு ஆட்டோ மீது மோதி அதே வேகத்தில் ஆட்டோவிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மற்றும் கார் மீது மோதி நின்றுள்ளது. இதற்கிடையில் அந்த லாரிக்கு பின்னல் வந்து கொண்டிருந்த டிராக்டர் மற்றும் 2 லாரிகள் அடுத்தடுத்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு லாரி கட்டுப்பாட்டை இழந்து பேக்கரிக்குள் புகுந்துள்ளது.

இந்த பயங்கர விபத்தில் டிரைவர்கள் உள்பட 5 பேர் படுகாயமடைந்துள்ளது. இதனையடுத்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற மோகனூர் காவல்துறையினர் படுகாயமடைந்தவர்களை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலஸ் மூலம் அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விபத்திற்குள்ளான வாகனங்களை அங்கிருந்து அப்புறப்படுத்தி போக்குவரத்து நெரிசலை சீரமைத்துள்ளனர்.

Categories

Tech |