பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சமையல் மட்டுமல்லாமல் பல்வேறு வகையில் பயன்படுத்தலாம். அதைப்பற்றி நாம் இந்த தொகுப்பில் தெரிந்துகொள்வோம்.
சோடியம் பை கார்பனேட் என்று அழைக்கப்படும் பேக்கிங் சோடா பெரும்பாலும் பேக்கிங் சமையலுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனை தவிர வேறு சில பராமரிப்பு பணிகளுக்காகவும் நாம் இதை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை வைத்து குளியல் அறை, சமையல் அறை போன்றவை சுத்தம் செய்ய முடியும். இதனை கொண்டு டைல்ஸ் பாத்திரங்கள், வெள்ளி பொருட்கள், வாஷிங்மெஷின் போன்றவற்றையும் சுத்தம் செய்யலாம். பேக்கிங் சோடாவை நாம் பயன்படுத்தலாம் என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.
கடைகளில் இருந்து வாங்கும் பழங்கள் காய்கறிகளை பேக்கிங் சோடாவை பயன்படுத்தி சுத்தம் செய்ய முடியும். நாம் வாங்கும் பழங்கள், காய்கறிகளில் பெரும்பாலும் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கப்பட்டிருக்கும். அதனை நீக்க பேக்கிங் சோடா பெரிதும் பயன்படுகின்றது.
நீங்கள் உபயோகிக்கும்கார்ப்பெட்டுகள் மற்றும் கம்பளி விரிப்புகளில் துர்நாற்றம் வீசினால் அதனை பேக்கிங் சோடா மூலம் எளிதாக அகற்ற முடியும்.
நெஞ்செரிச்சலை சரி செய்வதற்கும் பேக்கிங் சோடா பயன்படுகின்றது. நெஞ்செரிச்சல் என்பது அமில ரிப்ளக்ஸ் நோய் என்று அழைக்கப்படுகிறது. இது தொண்டை பகுதியில் ஒரு அசௌகரியமான உணர்வை ஏற்படுத்தும். இதை தவிர்க்க பேக்கிங் சோடா உதவும் ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு டீஸ்பூன் பேக்கிங் சோடாவை கலந்து குடிப்பதன் மூலம் நெஞ்செரிச்சல் சரி ஆகிவிடும்.
தொண்டை புண் தொண்டை வலியால் அவதிப்படுபவர்கள் பேக்கிங் சோடாவை பயன்படுத்தலாம். பேக்கிங் சோடாவை தண்ணீரில் கலந்து ஒரு நாளைக்கு மூன்று முறை என்ற விகிதத்தில் வாயை கொப்பளித்து வந்தால் தொண்டை வலி சரியாகும்.
அக்குளில் உள்ள கருமையைப் போக்குவதற்கு பேக்கிங் சோடா உதவுகிறது. பேக்கிங் சோடாவை நீரில் கலந்து அதனை அக்குள் பகுதியில் தடவி ஒரு நிமிடம் மசாஜ் செய்து விட்டு பின்னர் 30 நிமிடங்கள் அதனை அப்படியே வைத்து கழுவி வந்தால் அக்குள் கருமை நீங்கிவிடும்.
வாய் துர் நாற்றத்தால் அவதிப்படுபவர்கள் பேக்கிங் சோடாவை மவுத் வாஷ் போன்று பயன்படுத்தலாம். இதனால் உங்களது வாய் புத்துணர்ச்சி அடையும். இப்படி பல நன்மைகளை பேக்கிங் சோடா செய்கின்றது.
இது தவிர வெள்ளிப் பொருள்கள், பித்தளை பொருட்கள், தீய்ந்துபோன பாத்திரங்கள் போன்றவற்றை சரி செய்வதற்கு உதவுகிறது.