Categories
மாநில செய்திகள்

பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து…. தமிழக அரசு அதிரடி…. அரசாணை வெளியீடு….!!!!

கடந்த அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்யப்பட்டதற்கான அரசாணையை தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியின்போது 2014ஆம் நிதியாண்டின் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் என்ற புதிய முறையை கொண்டு வந்தனர். அதில் ஒவ்வொரு மாவட்டத்திலும் லட்சம் ரூபாயுடன் கோடி ரூபாய்களும் மேற்கொள்ளப்பட்ட பல பணிகள் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே டெண்டர் ஆக பெரிய நிறுவனங்களிடம் வழங்கப்பட்டது.

அதனால் சில ஒப்பந்த நிறுவனங்கள் மட்டுமே அதில் ஆதாயம் பெற்றன. சிறிய ஒப்பந்ததாரர்கள் வருவாய் இழப்பிற்கு ஆளாகினர். இதை அடுத்து திமுக ஆட்சிக்கு வந்தபிறகு பேக்கேஜ் டெண்டர் முறையை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்தனர். அந்தக் கோரிக்கையை ஏற்ற முதல்வர் ஸ்டாலின் விரைவில் பேக்கேஜ் டெண்டர் முறை ரத்து செய்யப்படும் என அறிவித்தார்.

இந்நிலையில் பேக்கேஜ் டெண்டர் சிஸ்டம் ரத்து செய்து அதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இதையடுத்து வரும் காலங்களில் நெடுஞ்சாலை மற்றும் பொதுப்பணித் துறையால் மேற்கொள்ளப்படவுள்ள பணிகளுக்கு தனித்தனியாகவே டெண்டர் விடப்படும் என ஏற்கனவே அமைச்சர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் இந்த முடிவிற்கு ஒப்பந்ததாரர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |