Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேசாமல் இருந்த கணவர்…. 2 குழந்தைகளை தவிக்க விட்டு தாய் தற்கொலை…. பெரும் சோகம்…!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள திக்கணங்கோடு கொல்லாய் பகுதியில் ராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கொத்தனாராக வேலை பார்த்து வருகிறார். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் சிவலெட்சுமி(35) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ராஜன் வெளிநாட்டிற்கு சென்றதால் சிவலெட்சுமி தனது மாமனார் வீட்டில் பிள்ளைகளோடு வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வெளிநாட்டில் இருக்கும் கணவரோடு செல்போனில் பேசியபோது திடீரென கருத்து வேறுபாடு காரணமாக தகராறு ஏற்பட்டது.

அதன் பிறகு பேசும்போதெல்லாம் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதால் கடந்த ஒரு வாரமாக ராஜன் தனது மனைவியுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். இதனால் மன உளைச்சலில் இருந்த சிவலெட்சுமி தனது பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிவலெட்சுமியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |