Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருக்கும்போது…. “செல்போனை பிடுங்கி சென்ற வாலிபர்”…. சத்தம் போட்ட வியாபாரி… மடக்கி பிடித்த மக்கள்…!!

ஜோலார்பேட்டையில் கடைக்காரரிடம் செல்போன் திருடிய நபரை பொதுமக்கள் பிடித்து காவல்நிலையத்தில் ஒப்படைத்தார்கள்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகில் வக்கணம்பட்டி வி.டி.கோவிந்தசாமி தெருவில் வசித்து வருபவர் சில்பாகுமார்(40). இவர் ஜோலார்பேட்டை ரயில் நிலையம் அருகில் புது ஓட்டல் தெருவில் பாஸ்ட் புட் கடை வைத்திருக்கிறார். இந்நிலையில் கடந்த 25-ம் தேதி இரவு தனது கடையில் செல்போன் பேசிக் கொண்டிருந்த போது அடையாளம் தெரியாத ஒரு நபர் சில்பாகுமார் செல்போனை திருடிவிட்டு தப்பித்து சென்றார்.

உடனே சில்பாகுமார் கத்தி சத்தம் போட்டார். அந்த சத்தத்தை கேட்டு அங்கிருந்த பொதுமக்கள் அந்த நபரை மடக்கிப் பிடித்து ஜோலார்பேட்டை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்கள். இதையடுத்து காவல்துறைனர் நடத்திய விசாரணையில் அவர் திருப்பத்தூர் மாவட்டம் திருமால் நகர் ஏரிக்கோடியை சேர்ந்த ஜெயசீலன் மகன் 23 வயதான விக்னேஷ் என்பது தெரியவந்தது.

மேலும் இது குறித்து சில்பாகுமார் அளித்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி வழக்கு பதிந்து விக்னேஷை கைது செய்து அவரிடம் இருந்த செல்போனை  பறிமுதல் செய்தார்.

Categories

Tech |