Categories
பெரம்பலூர் மாவட்ட செய்திகள்

பேசிக்கொண்டிருந்த நண்பர்கள்…. பயங்கர சத்தத்துடன் தாக்கிய மின்னல்…. பெரம்பலூரில் பரபரப்பு…!!

மின்னல் தாக்கியதால் 2 வாலிபர்கள் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள கவுல்பாளையத்தில் செல்லத்துரை என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தனது நண்பர்களான ராமர், வெங்கடேசன் ஆகியோருடன் சோமாண்டபுதூர் கிராம எல்லையில் இருக்கும் தனது பெரியப்பா ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான வயலுக்கு சென்றுள்ளார். அப்போது இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்ததால் நண்பர்கள் ஒரு புளிய மரத்தடியில் ஒதுங்கி அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர். அப்போது வெங்கடேசன் சிறுநீர் கழிப்பதற்காக எழுந்து சற்று தூரமாக சென்று விட்டார்.

இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்லதுரையும், ராமரும் அமர்ந்து பேசிக் கொண்டிருந்த இடத்தில் மின்னல் தாக்கியது. இதனால் 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர். மேலும் வெங்கடேசனுக்கு இரண்டு கால்களும் சிறிது நேரம் உணர்வற்ற நிலையில் இருந்துள்ளது. இதனை பார்த்ததும் வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தவர்கள் விரைந்து சென்று வெங்கடேசனை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |