வேன் ஓட்டுனரை தாக்கிய குற்றத்திற்காக 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள எஸ்.எஸ்.நல்லூர் மணப்பள்ளி கிராமத்தில் வேன் ஓட்டுநரான பிரவீன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் பள்ளி குழந்தைகளை தனது வேனில் ஏற்றிக்கொண்டு நத்தம் கடைவீதியில் இறக்கிவிட்டு குழந்தைகளின் பெற்றோர்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயம் அதே பகுதியில் வசித்து வரும் 2 நபர்கள் முன்விரோதம் காரணமாக பிரவீனை கத்தியால் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்து சென்றனர்.
இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் பிரவீனை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பிரவீன் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனையடுத்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் அஜித் மற்றும் பிரகாஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.