Categories
மதுரை மாவட்ட செய்திகள்

“பேசிட்டே இருக்க கூடாது” மகளை கண்டித்த பெற்றோர்…. பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டத்திலுள்ள சிலையநெரி கருமாரியம்மன் கோவில் தெருவில் முனியாண்டி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கவிதா என்ற மகள் இருந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் செல்போனில் பேசிக்கொண்டிருந்த கவிதாவை அவரது பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மன உளைச்சலில் இருந்த கவிதா தனது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மாணவியின் சடலத்தைக் கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |