Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

பேசி கொண்டிருந்த காதல் ஜோடி…. மின்சார ரயில் மோதி இறந்த சம்பவம்…. சோகத்தில் குடும்பத்தினர்…!!

ரயில் மோதி காதலர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் உள்ள சாந்தமங்கலம் எம்.ஜி.ஆர் நகரில் ஆரோக்கியதாஸ் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் அலெக்ஸ் ஐ.டி.ஐ படித்து முடித்துவிட்டு மறைமலைநகரில் இருக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். அதே பகுதியில் அலெக்ஸ் நண்பர்களோடு அறை எடுத்து தங்கியுள்ளார். இவரும் அதே நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஜெர்சலின் என்ற பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். நேற்று முன்தினம் ஜெர்சலின் தங்கியிருந்த அறை அருகே இருக்கும் ரயில்வே தண்டவாளம் பகுதியில் காதலர்கள் பேசி கொண்டிருந்தனர்.

அப்போது செங்கல்பட்டில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி இரவு நேர கடைசி மின்சார ரயில் வந்ததால் அதிர்ச்சியடைந்த காதல் ஜோடி தண்டவாளத்தின் ஓரமாக ஒதுங்கி நின்றனர். ஆனாலும் ரயிலில் அடிபட்டு 2 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அலெக்ஸ் மற்றும் ஜெர்சலின் ஆகியோரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |