Categories
மாநில செய்திகள்

பேச்சால் மக்களை கட்டி போடும் ட்ரெண்டிங் சாமியார்…. பெரும் பரபரப்பு….!!!!

கடந்த சில  தினங்களாகவே சமூக வலைதளங்களில் அன்னபூரணி சாமியார்.அதிகமாக பேசப்பட்டு வருகிறார். பளபளக்கும் பட்டுச்சேலை அணிந்துகொண்டு மக்களுக்கு இவர் அருள்வாக்கு சொல்லும் வீடியோக்களை பல்லாயிரக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் பார்த்து பலவிதமான விமர்சனங்களை செய்து வருகிறார்கள். இதற்கு இவரது கடந்த கால வாழ்க்கையே காரணமாகும். கடந்த சில வருடங்களுக்கு முன் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கள்ளக்காதல் தொடர்பான விவாதத்தில் பங்கேற்று இருந்த அன்னபூரணி சாமியாராகி சில ஆண்டுகள் ஆகிறது. ஆனால் தற்போதுதான் அவர் வெளிச்சத்துக்கு வந்துள்ளார். அன்னபூரணி மக்களுக்கு அருள்வாக்கு கூறுதல் மற்றும் ஆசி வழங்கும் வீடியோக்கள் அதிகமாக வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவில் வயது வித்தியாசம் இல்லாமல் பலரும் அவரது கால்களில் விழுந்து கிடக்கிறார்கள். தற்போது ஏராளமான மக்கள் பல்வேறு கவலைகள், பிரச்சினைகளுக்கு இடையே வாழ்ந்து வருகிறார்கள். அவர்களின் இது போன்ற இயலாமையை பயன்படுத்திக் கொண்டு பெண் சாமியார் அன்னபூரணி வால்போஸ்டர்கள் மூலம் “உங்களது பிரச்சினைகள் தீர எங்களை நாடி வாருங்கள்” என்று விதவிதமான போஸ்டர்களையும் அச்சடித்து ஒட்டி பல இடங்களில் அருள்வாக்கு நிகழ்ச்சிகளையும் நடத்தியுள்ளார். இதுபோன்ற நிகழ்ச்சிகளின்போது அதற்கான ஏற்பாடுகளை செய்ய தனிக்குழுவும் செயல்பட்டுள்ளது. இக்குழுவினர் முன் கூட்டியே அருள்வாக்கு நிகழ்ச்சியின்போது யார்-யார் என்ன செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து அதன்படியே நிகழ்ச்சி நடைபெறுவதாகவும் தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

தீராத நோய்கள் தீர்ந்து விடும், உங்கள் மனக்குறைகள் அகலும், திருமண தடைகள் நீங்கும் என்று மக்கள் நாள்தோறும் பிரச்சினைகளை முன்நிறுத்தியே பெண் சாமியார் அன்னபூரணி பிரசாரங்கள் அமைந்துள்ளன. இதுபோன்ற அனைத்துவிதமான கஷ்டங்களையும் தீர்த்து வைக்க சக்தி அவதாரமாக திகழும் அன்னபூரணி சாமியாரை வழிபடுவோம் வாருங்கள் என்றும் தாயின் பாத கமலங்களில் தஞ்சம் அடைவோம் என்றும் போஸ்டர்களில் கவர்ந்து இழுக்கும் வாசகங்களை குறிப்பிட்டு அருள்வாக்கு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுபோன்ற நிகழ்ச்சிகளில் அன்னபூரணி பல்வேறு இடங்களில் தனது கவர்ந்திழுக்கும் பேச்சு மூலம் பொதுமக்களை கட்டி போட்டுள்ளார். பல இடங்களில் அருள் வந்து ஆடுவது போன்று பார்வையாலேயே ஆசி வழங்கியுள்ளார். அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு சொல்லும் நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்து அதனை சமூக வலைதளங்களில் அவரே பரப்பியுள்ளார். அதனை பார்த்து பல பேரும் கூட்டம் கூட்டமாக அவரது அருள்வாக்கு நிகழ்ச்சிகளுக்கு சென்றுள்ளனர். அப்போது தன்னை நம்பி வந்துள்ள மக்களின் பிரச்சினைகளை கேட்டு அவரிடம் இருந்து அதிகளவில் காணிக்கையாக பணத்தை கறந்ததாக கூறப்படுகிறது.

புத்தாண்டை முன்னிட்டு இதுபோன்ற ஒரு அருள்வாக்கு நிகழ்ச்சிக்குதான் செங்கல்பட்டில் அன்னபூரணி சாமியார் ஏற்பாடு செய்திருந்தார். இந்த நிகழ்ச்சிக்கான போஸ்டர்களும், அவரது வீடியோக்களும் ஏற்படுத்திய பரபரப்பால் நிகழ்ச்சிக்கு காவல்துறையினர் தடை விதித்துள்ளனர். அதன்பின் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு வந்து புகார் கொடுத்த அன்னபூரணி சாமியார் தனக்கும், தனது சீடர்களான குழந்தைகளுக்கும் தொடர்ந்து மிரட்டல் வருகிறது என்று குற்றம் சாட்டினார். இந்நிலையில் நிருபர்கள் அவரிடம், அருள்வாக்கு குறித்தும் கடந்த வாழ்க்கை தொடர்பாகவும் கேள்வி எழுப்பினர். இதற்கு சரிபயன பதில் அளிக்காமல் அன்னபூரணி சாமியார் ஓட்டம் பிடித்தார்.

இதனைதொடர்ந்து அவர் வெளியிடங்களில் இன்னும் தலைகாட்டாமலேயே இருக்கிறார். அவரது நிகழ்ச்சிகள் எங்காவது நடைபெறுகிறதா என்று உளவு பிரிவு காவல்துறையினரும் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அன்னபூரணி சாமியாரின் அருள்வாக்கு நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டில் தடை விதிக்கப்பட்டுள்ளதை போன்று பிற இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடத்துவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பால் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. இதனால் அருள்வாக்கு நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் அன்னபூரணி சாமியார் தொடர்ந்து அவதிப்பட்டு வருகிறார்.

இதனிடையில் அன்னபூரணி சாமியார் மீது சென்னை கமிஷனர் அலுவலகத்தில் இந்து அமைப்பினர் கொடுத்த 5 புகார்கள் நிலுவையில் உள்ளது. இந்த புகார்களின் மீது என்ன நடவடிக்கை எடுக்க முடியும் என்பது குறித்து காவல்துறையினரும் ஆலோசித்து வருகிறார்கள். அதேசமயம் அன்னபூரணி சாமியாரின் கணவர் அரசுவின் மரணத்திலும் மர்மம் உள்ளதாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பலர் கூறி வருகிறார்கள். இதுகுறித்தும் காவல்துறையினர் ரகசிய விசாரணையில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் அன்னபூரணி சாமியார் அருள்வாக்கு குறித்து பல புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. வி.ஐ.பி.க்கள் பல பேரும் அன்னபூரணி சாமியாரிடம் நேரில் சென்று அருள்வாக்கு பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாகவும் காவல்துறையினர் ரகசிய விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன் முடிவில் அன்னபூரணி சாமியாருடன் தொடர்பில் இருந்த முக்கியமான பிரமுகர்கள் யார் என்பது தெரியவரும். அன்னபூரணி சாமியாரால் பெரிய அளவில் யாராவது பணத்தை இழந்து பாதிக்கப்பட்டுள்ளார்களா..? என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்று வருகிறது. அன்னபூரணி சாமியார் மீது இந்து அமைப்புகள் கொடுத்த புகாரில் “மதத்தின் பெயரை கூறி மக்களின் நம்பிக்கையை பயன்படுத்தி மோசடி செயல்களில் அவர் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில்  அன்னபூரணி சாமியாரால் பாதிக்கப்பட்டவர்கள் யாராவது இருக்கிறார்களா..? என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.

Categories

Tech |