போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உக்ரேன் தயாராக இருப்பதாக அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
ரஷ்யப் படைகள் உக்ரேனின் மீது தொடர்ந்து 3 ஆவது நாளாக வான், தரை, கடல் என மும்முனைகளிலிருந்தும் தாக்குதல் நடத்தி வருகிறது. அதுமட்டுமின்றி உக்ரேனின் பல பகுதிகளில் ரஷ்யா ஏவுகணை மழையை பொழிந்து வருகிறது. அதேபோல் உக்ரேன் அரசும் ரஷ்ய ராணுவத்திற்கு தகுந்த பதிலடி கொடுத்து வருகிறது.
இவ்வாறு இருக்க உக்ரேன் நாட்டு அதிபரான ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது போர் நிறுத்தம் மற்றும் அமைதி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தாங்கள் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி உக்ரைன் மற்றும் ரஷ்யா பேச்சுவார்த்தையை எங்கு எப்போது நடத்துவது என்பது குறித்து ஆலோசித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.