இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக பொய்யான தகவலை பரப்பிய பாகிஸ்தான் மூத்த அதிகாரிக்கு மத்திய அரசு பதிலடி கொடுத்துள்ளது
பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு மற்றும் மூலோபாய கொள்கை திட்டமிடலின் அதிகாரியான மோஹித் யூசுப் என்பவர் ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்தார். அப்போது இந்தியாவிடமிருந்து பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து செய்தி கிடைத்து இருப்பதாக அவர் கூறினார். அவரது இந்த கருத்து நமது நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்து வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்தவா கூறுகையில் “இந்திய ஊடகத்துக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் மூத்த அதிகாரி இந்தியா பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்ததாக கூறினார்.
நம் நாட்டிலுள்ள உள்விவகாரங்கள் குறித்து அவர் கருத்து தெரிவித்தார். இதேபோன்று தினசரி தலைப்புச் செய்திகளில் நம் நாட்டை இழுத்து இம்ரான்கான் அரசாங்கம் தங்களின் உள்நாட்டு தோல்விகளில் இருந்து அனைவரது கவனத்தையும் திசை திருப்புவதற்கு உள்நாட்டு அங்கத்தினர்களை தவறான முறையில் வழிநடத்த செய்யும் முயற்சியே.அவர் ஊடகத்திற்கு பேட்டி அளித்தபோது கூறிய கருத்துக்கள் கள நிலவரத்திற்கு முரணானவை. கற்பனை நிறைந்த தவறான தகவல்.
இந்தியா தரப்பில் இருந்து அவர் சொன்னதுபோல் எந்த செய்தியும் அனுப்பப்படவில்லை என்பதை நான் தெளிவு படுத்துகிறேன். இந்தியாவுக்கு எதிரான பயங்கரவாதத்தை தொடர்ந்து பாகிஸ்தான் ஆதரவு அளித்து வருகிறது. பாகிஸ்தானின் தலைமை இந்தியாவிற்கு எதிராக வெறுக்கத்தக்க கருத்துக்களை வெளியிடுவதில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. நம் நாட்டிற்கு எதிரான பயங்கரவாதத்திற்கு இத்தகைய கேவலமான மற்றும் தவறான மொழியைப் பயன்படுத்துவது அந்த உறவுகளுக்கு நல்லதல்ல” என கூறினார்.