Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பேச்சு மூச்சு இல்லாமல் கிடந்த பெண்…. காதல் கணவரின் வாக்குமூலம்…. பரபரப்பு சம்பவம்…!!!

கணவர் மனைவியை கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பரமார்த்த லிங்கபுரம் பகுதியில் ஆண்டனி(30) என்பவர் வசித்து வருகிறார். இவர் புதிய வீடுகளுக்கு உள் அலங்காரம் செய்யும் வேலை பார்த்து வருகிறார். இவர் பத்மா(30) என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியினருக்கு ஒரு மகளும், ஒரு மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் பத்மா யாரிடமும் நீண்ட நேரம் செல்போனில் பேசிக் கொண்டிருந்ததை பார்த்த ஆண்டனி தனது மனைவியை கண்டுள்ளார். மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் கோபமடைந்த ஆண்டனி வீட்டை விட்டு வெளியே சென்றார்.

காலை 10 மணிக்கு தையல் வகுப்புக்கு அழைத்துச் செல்வதற்காக பத்மாவின் தந்தை அங்கு சென்றபோது தனது மகள் மயங்கி கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி போலீசார் வந்து பார்த்தபோது பத்மா இறந்தது தெரியவந்தது. அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார் விசாரணை நடத்திய போது ஆண்டனி காவல் நிலையத்திற்கு வந்து சரணடைந்தார். அப்போது தனது மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்ததை ஆண்டனி ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |