மின்வாரிய ஊழியர்களின் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
புதுவை அரசின் மின் துறையை தனியார் மையமாகும் நடவடிக்கையின் தொடக்கமாக மின்விநியோகம் தொடர்பாக ஒப்பந்த அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து மின் ஊழியர்கள் கூட்டமைப்பினர் செப்டம்பர் 28-ம் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் மின்துறை ஊழியர்களின் போராட்டத்தால் புதுச்சேரி முழுவதும் மின்தடையால் பாதிக்கப்பட்டு பல இடங்களில் பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கிருமாம்பாக்கம் போலீசார் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை மேற்கொண்டுள்ளனர்.
போலீசரின் நடவடிக்கையால் மின்தடை சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது. புதுச்சேரி நகரில் சனிக்கிழமை மாலை 6 மணிக்கு திடீரென மின்தடை ஏற்பட்டுள்ளது. இதனால் நகரமே இருளில் மூழ்கியுள்ளது இதனை அடுத்து சுயேச்சை எம்எல்ஏக்கள் நேரு, பிரகாஷ் குமார் போன்றோர் புதுவை சட்டப்பேரவை வளாகத்தில் பொதுமக்கள் ஆதரவாளர்களுடன் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி நகரில் ஏற்பட்ட மின்தடையினால் காங்கிரஸ் எம்எல்ஏ வைத்தியநாதன் தலைமையில் பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த சூழலில் புதுவை சட்டப்பேரவை அலுவலக வளாகத்தில் மாநில மின்துறை அமைச்சர் ஏன் நமச்சிவாய மின்துறை செயலத்தி அருண் தலைமை செயலர் ராஜு வர்மா, டிஜிபி மனோஜ் குமார் லால் மற்றும் அதிகாரிகள் ஆலோசனைகள் ஈடுபட்டுள்ளனர் மின்தடையை நீக்குவது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகின்றது. இந்த நிலையில் புதுச்சேரி முழுவதும் கடந்த சில நாட்களாக மின்துறை ஊழியர்களின் போராட்டம் அவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் என நடைபெற்று வந்த நிலையில் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் பேச்சு வார்த்தையில் சமூக உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து போராட்டம் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.