Categories
தேசிய செய்திகள்

பேச்சை கேட்காமல் விளையாடப் போன 9 வயது சிறுமி… சூடுவைத்த தாய்… பின்னர் நடந்த சம்பவம்…!!!

மகள் தனது பேச்சை கேட்காமல் விளையாட சென்ற காரணத்தினால் 9 வயது சிறுமிக்கு தாய் சூடு வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர், ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வரும் பத்மா என்பவருக்கு, திருமணம் முடிந்து 9 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு மகள் வெளியே வெளியே விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது பத்மா தனது மகளிடம் வெளியே விளையாட கூடாது என கூறியுள்ளார். ஆனாலும் அந்த சிறுமி கேட்காமல் பக்கத்துவீட்டு குழந்தைகளுடன் மீண்டும் விளையாடிக் கொண்டிருந்தார். இதனால் ஆத்திரமடைந்த பத்மா எரியும் மெழுகுவர்த்தியை வைத்து மகளின் காலில் சூடு வைத்ததாக தெரிகிறது.

சிறுமியின் காலில் தீக்காயம் உண்டானதால் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அதுபற்றி சிறுமியிடம் டாக்டர் கேட்கவே, அவரும் தனது தாய் தான் காலில் சூடு வைத்தார் என தெரிவித்துள்ளார். இதுகுறித்து மருத்துவர்கள் காவல்துறைக்கு தெரிவித்தனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் குழந்தைகள் நலத்துறை அதிகாரிகள் அவர் தாய் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |