Categories
தேசிய செய்திகள்

பேடிஎம் க்யூஆர் கோடு மூலம் டிப்ஸ் வாங்கிய நீதிபதி உதவியாளருக்கு எதிராக…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு….!!!!

உயர்நீதிமன்றத்தில் நீதிபதிக்கு உதவியாளராக பணியாற்றும் ராஜேந்திரகுமார் வழக்கு வாதாட வரும் வக்கீல்களிடம் இருந்து டிப்ஸ் வாங்குவதாக புகார் பெறப்பட்டது. இது தொடர்பாக நீதிபதி அஜித்குமார் அலகாபாத் உயர்நீதிமன்றம் தலைமை நீதிபதியிடம் புகாரளித்தார். அத்துடன் ராஜேந்திரகுமார் ரொக்கமாக டிப்ஸ் வாங்கினால் பிரச்சனை எழும் என்று, பேடிஎம் க்யூஆர் கோடு வாயிலாக டிப்ஸ் வாங்கி வந்தது தெரியவந்தது.

சென்ற சில நாட்களாக இடுப்பில் பேடிஎம் க்யூஆர் கோடு அட்டையை சொருகி வைத்திருக்கும் நீதிபதி உதவியாளரின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாகியது. இவ்வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ராஜேந்திரகுமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டது.

Categories

Tech |