மாற்றுத்திறனாளிகளுக்கு பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலியை ஆட்சியர் வழங்கினார்.
திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 19 லட்சம் மதிப்பிலான பேட்டரியால் இயங்கும் சிறப்பு சக்கர நாற்காலிகளை மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் திருவாரூர் எம்.எல்.ஏ உள்ளிட்டோர் வழங்கினார்கள். பின் ஆட்சியர் பேசியதாவது, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக தேசிய அடையாள அட்டைகள், உதவித்தொகை என பல நலத்திட்ட உதவிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
சிறு, குறு, நடுத்தரமான மாற்றுத்திறனாளிகள் சுய தொழில் செய்து பொருளாதாரத்தை உயர்த்திக் கொள்வதற்காக வங்கியின் மூலமாக கடன் உதவி தரப்படுகின்றது. 18 வயதிற்கு மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு ஸ்மார்ட் செல்போன், மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள் வழங்கப்படுகின்றது. இதை பயன்படுத்தி பயன்பெறுமாறு ஆட்சியர் கேட்டுக் கொண்டுள்ளார்.