பெண்ணின் வயிற்றிலிருந்து 55 பேட்டரிகளை அகற்றிய மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.
அயர்லாந்து நாட்டில் உள்ள ஒரு பகுதியில் 66 வயதான பெண் ஒருவர் வசித்து வருகிறார். இவர் தன்னைத்தானே காயப்படுத்திக் கொள்ளும் வகையில் 50-க்கும் மேற்பட்ட ஏஏ மற்றும் ஏஏஏ ரக பேட்ரிகளை விழுங்கியுள்ளார். இதுகுறித்து அயர்லாந்து நாட்டின் உள்ள மருத்துவ நாளிதழான தீ ஹப் போஸ்டில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் அந்த பெண் வின்சென்ட் பல்கலைக்கழக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது வயிற்றுப் பகுதியை எக்ஸ்-ரே எடுத்து பார்த்தபோது அவரில் உடலில் 50-க்கும் மேற்பட்ட பேட்டரிகள் இருப்பது உறுதியானது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அவரின் இரைப்பை குடல் பாதையை அடைத்து கொண்டு அதை தடுக்கும் வகையில் பேட்டரிகள் எதுவும் எக்ஸ்-ரேவில் தோன்றவில்லை என மருத்துவர்கள் தெரிவித்தனர்.
இந்நிலையில் அந்தப் பெண்ணின் உடலில் இருந்து இயற்கையாக மலம் வழியாக பேட்டரிகள் வெளியேறும் வரை மருத்துவர்கள் காத்திருந்தனர். ஆனால் ஒரு வாரம் ஆகிய பிறகு மலம் வழியாக 5 ஏஏ ரக பேட்டரிகள் வெளியேறினர். ஆனால் அந்த பெண்ணிற்கு தீராத வயிற்று வலி ஆரம்பித்துள்ளது. இதனையடுத்து நாட்டின் சிறந்த மருத்துவர்கள் குழுவினர் 46 பேட்டரிகளை அகற்றினர். மேலும் பெருங்குடலில் சிக்கிய 4 பேட்டரிகளை ஆசனவாய் வழியாக வெளியேற்றியுள்ளனர். இந்நிலையில் ஒரு பெண்ணின் குடல் மற்றும் வயிற்றில் இருந்து 55 பேட்டரிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றி அதிசய சம்பவம் நடந்துள்ளது. இந்த மருத்துவர்களை பலரும் பாராட்டி வருகின்றனர்.