Categories
கிரிக்கெட் விளையாட்டு விளையாட்டு கிரிக்கெட்

பேட்டால் அடிக்க பாய்ந்த ஆசிஃப் அலி….. மேட்ச்ல இருந்து தூக்குங்க…. ஆப்கான் முன்னாள் கிரிக்கெட் நிர்வாகி ட்விட்.!!

ஆசியக்கோப்பையின் மீதமுள்ள போட்டியில் ஆசிஃப் அலியை தடை செய்ய வேண்டும் என்று ஆப்கான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தெரிவித்துள்ளார்.

ஆசிய கோப்பையில் நேற்று நடந்த சூப்பர் 4 சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதியது இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 129 ரன்கள் மட்டுமே எடுத்தது. பின்னர் 130 ரன்களை துரத்திய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 16வது ஓவரில் 87/3 என்ற நிலையில் இருந்தது. ஆனால், கடைசி ஓவரில் பாகிஸ்தான் 118/9 என்று சரிந்தது. ஆட்டம் பரபரப்பான நிலையில் கடைசி ஓவரில், வெற்றிக்கு 11 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், பாரூக்கி ஓவரில் தொடர்ந்து 2 சிக்ஸர் அடித்து பாகிஸ்தானுக்கு ஹீரோவாக மாறிநார் நசீம் ஷா. இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்குள் நுழைந்து 11ஆம் தேதி இலங்கையை எதிர்கொள்கிறது.

இந்த போட்டியில் பரீத் அகமது வீசிய 19 ஆவது ஓவரின் 4ஆவது பந்தில் ஆசிப் அலி ஒரு சிக்சர் அடித்து பின் அடுத்த பந்தில் அதேபோல சிக்ஸர் அடிக்க நினைத்தார்.. ஆனால் அந்த பந்து கரீம் ஜனத்திடம் செல்ல கேட்ச் ஆகி ஆட்டமிழந்தார்.. விக்கெட்டை எடுத்த மகிழ்ச்சியில் பரீத் அகமது, ஆசிப் அலி அருகே சென்று கத்தினார். இதனால் ஆத்திரமடைந்த ஆசிப் அலி அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தள்ளிவிட்டு சென்றார்.. அதுமட்டுமில்லாமல் பரீத்தை பேட்டால் அடிக்க ஓங்கினார். இதையடுத்து சகவீரர்கள் மற்றும் அம்பயர் வந்து சமாதானப்படுத்தி இருதரப்பையும் அனுப்பி வைத்தனர்.. இந்த பரபரப்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

இந்நிலையில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் முதன்மை அதிகாரி ஷபிக் ஸ்டானிக்சாய் தனது ட்விட்டர் பக்கத்தில், இது ஆசிஃப் அலியின் தீவிர முட்டாள்தனம் மற்றும் மீதமுள்ள போட்டிகளில் இருந்து தடை செய்யப்பட வேண்டும், எந்த பந்து வீச்சாளரும் கொண்டாட உரிமை உண்டு. ஆனால் உடல் ரீதியாக எதிர்க்கும் செயலை ஏற்றுக்கொள்ள முடியாதது” என்று தெரிவித்துள்ளார்..

அதேபோல பாகிஸ்தானின் வெற்றியை ஏற்றுக் கொள்ள முடியாத ஆப்கானிஸ்தான் ரசிகர்கள் மைதானத்தில் உள்ள நாற்காலிகளை பிடுங்கி பாகிஸ்தான் ரசிகர்களை தாக்கினர். இதனால் பதிலுக்கு பாக். ரசிகர்களும் சண்டையில் ஈடுபட்டனர்.. இதனால் மைதானத்தில் பரபரப்பு ஏற்பட்டது.. இது தொடர்பான வீடியோவும் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |