நடிகர் சிபி சத்யராஜ் பேட்டியில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்துள்ளார்.
நடிகர் சத்யராஜின் மகனும் தமிழ் சினிமா உலகின் முன்னணி நடிகருமான சிபி சக்கரவர்த்தி பேட்டி ஒன்றில் பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். இவர் தற்பொழுது தான் நடித்துள்ள ரங்கா திரைப்படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து இருக்கின்றார். அப்பொழுது படத்தின் ஹீரோ சண்டை வேண்டாம் என ஒதுங்கும் கதாபாத்திரம் என படத்தின் கதை குறித்து பேசியுள்ளார். என் அம்மா எனக்கு மிகவும் சப்போர்ட்டிவ். எங்கள் நிறுவனத்தில் தயாரிக்கப்படும் படங்களின் புரோடக்சன் பணிகளை அம்மாதான் பார்த்துக்கொள்வார். அப்பா நடித்த கதாபாத்திரத்தில் அவர் நடித்த பெரியார் கதாபாத்திரம் பிடிக்கும்.
மேலும் அப்பாவுடன் இணைந்து நடிக்க சரியான கதை கிடைத்தால் நடிப்பேன் எனக் கூறியுள்ளார். சிவகார்த்திகேயன் நடிக்கும் டான் திரைப்படம் ரிலீஸாகும் தேதியிலேயே இவரின் ரங்கா திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதால் இது பற்றி அவரிடம் கேள்வி எழுப்பிய பொழுது அவர் கூறியுள்ளதாவது, டான் அண்ட் ரங்கா தான், டான் வெர்ட்ஸ் ரங்கா இல்லை என பதிலளித்தார். இதை அடுத்து சிவகார்த்திகேயன் படத்தின் டிரைலரை பார்த்து விட்டு வாட்ஸ் அப்பில் நம்ம ரெண்டு பேரும் ஜெயிப்போம் ப்ரோ என கூறியுள்ளதை சொன்னார். இதையடுத்து அவறிடம் பாலிவுட்டில் நடிப்பீர்களா என கேட்ட பொழுது பட வாய்ப்பு வந்தால் நடிப்பேன் என கூறியதை அடுத்து இந்தி தெரியுமா என்று கேட்ட பொழுதே இந்தி தெரியாது என ஓபனாக பேசினார்.