Categories
பேட்மிண்டன் விளையாட்டு

பேட்மிண்டனில் அசத்தல்… அடுத்த சுற்றுக்கு முன்னேற்றம்… கலக்கிய இந்தியர்கள்…!!

தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியாவை சேர்ந்த இருவர் அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளனர். 

பாங்காங்கில் இன்று தாய்லாந்தின் ஓபன் பேட்மிண்டன் தொடர் துவங்கியுள்ளது. இத்தொடரில் மகளிர்கான முதல் சுற்று ஆட்டத்தில் இந்தியாவை சேர்ந்த பிவி சிந்து மற்றும் தாய்லாந்தை சேர்ந்த புசனனன் ஓங்பாம்ருங்பான் ஆகியோர் மோதியுள்ளனர். மிகவும் விறுவிறுப்புடன் சென்றுகொண்டிருந்த இப்போட்டியில் சிந்து 21-17 ,21-13 என்ற கணக்கில் வகையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி புசனனனை வீழ்த்தியுள்ளார்.

இதனால் சிந்து இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மேலும் ஆடவர் ஒற்றையர் பிரிவும் நடைபெற்றுள்ளது. இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த்தும் தாய்லாந்தின் சித்திக்கோம் தம்மசினும் இந்த முதல் சுற்று போட்டியை எதிர்கொண்டுள்ளனர். இதில் ஸ்ரீகாந்த் முதல் செட்டில் 21-11 என்ற கணக்கிலும், 2-வது செட்டில் 21-11 என்ற கணக்கில் தம்மசினை வீழ்த்தி அசத்தியுள்ளார். இதனால் ஸ்ரீகாந்த்தும் இரண்டாம் சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

Categories

Tech |