Categories
பேட்மிண்டன் விளையாட்டு

சாம்பியன் பட்டம் வென்ற இந்திய வீராங்கனை…. பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து….!!!

சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் இறுதி போட்டியில் இந்திய வீராங்கனையான பி வி சிந்து மற்றும் தாய்லாந்து வீரரான பூசணன் ஓங்பாம்ரங்பான் ஆகிய இருவரும் மோதிக்கொண்டனர். இதில் 21-16, 21-8 என்ற நேர் செட் கணக்கில் பி வி சிந்து பூசனை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார். மேலும்  இந்திய வீராங்கனையான பி வி சிந்து வெற்றி பெற்றதற்காக பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதை பற்றி பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது,”சுவிஸ் ஓபன் 2022ல் வெற்றி பெற்றமைக்காக சிந்துவுக்கு என்னுடைய வாழ்த்துகள். அவரது வெற்றிகள் இந்தியாவின் இளைய சமூகத்தினருக்கு ஊக்கம் ஏற்படுத்தும். வருங்காலத்திலும் அவரது முயற்சிகளுக்காக என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்” என்று டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

Categories

Tech |