Categories
அரசியல் மாநில செய்திகள்

பேண்ட் சட்டை போட்டவன்…. விவசாயம் பண்ணக்கூடாதுனு யாரு சொன்னா…? – எல்எல்ஏ TRB ராஜா டுவீட்…!!!

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.  இந்தியளவில் வேளாண்மைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யும் மூன்றாவது மாநிலம் என்ற பெயரை இதன்மூலம் தமிழ்நாடு பெற்றுள்ளது. இந்த பட்ஜெட் தாக்களில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடும் விவசாயிகளுக்கு இந்த பட்ஜெட் அர்ப்பணிக்கிறேன்.

மனித நாகரிகப்படுத்தியது வேளாண்மை புரட்சி என்று கூறியுள்ளார். சிறுகுறு விவாசாயிகளை ஒருங்கிணைத்து கூட்டுப்பண்ணை முறை ஊக்குவிக்கப்படும். வேளாண்துறையில் இயற்கை வேளாண்மைக்கு தனி பிரிவு உருவாக்கப்படும்.நீர்வள ஆதாரங்களை பெருக்குதல், சூரிய சக்தி பம்பு செட்டுகள் ஆகியவை இடம்பெறும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் குறித்து பலரும் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக எம்எல்ஏ TRB ராஜா தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “பேண்ட் போட்டவன் எல்லாம் விவசாயம் பண்ண கூடாதுன்னு யார் சொன்னது? படித்த இளைஞர்களை விவசாயத்தின் பக்கம் ஈர்க்க பல திட்டங்கள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் இனி அடுத்த தலைமுறை இளைஞர்கள் விவசாயத்தை நோக்கி படையெடுப்பார்கள். முதலமைச்சருக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |