Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பேத்தியின் காதணி விழாவுக்கு சென்ற போது…. பாட்டிக்கு ஏற்பட்ட பரிதாபம்… சோகத்தில் குடும்பத்தினர்…!!!

மானூரில் பேருந்தில் இருந்து தவறி விழுந்து பெண் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், மானூர் அருகில் கட்டாரங்குளத்தில் வசித்து வருபவர் சூசை. இவருடைய மனைவி லீலா(58). இவர்களுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளார்கள். இந்நிலையில் லீலா நேற்று வெளியூரில் இருக்கின்ற தனது பேத்தியின் காதணி விழாவிற்கு சொந்தக்காரர்களுடன் செல்வதற்காக அரசு டவுன் பேருந்தில் ஏறி மானூர் வந்துள்ளார். அதன்பின் மானூர் பேருந்து நிறுத்தம் அருகில் வந்தபோது, சொந்தக்காரர்கள் இருக்கின்ற தனியார் வேனை பார்த்ததும் அவசர அவசரமாக பேருந்திலிருந்து இறங்க முயன்றுள்ளார்.

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்து விட்டார். இதில் பேருந்தின் பின் டயர் லீலாவின் மீது ஏறியதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த மானூர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லீலாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |