மூதாட்டியிடம் பண மோசடி செய்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள குணமங்கலம் கிராமத்தில் பவானி என்பவர் ரசித்து வருகிறார். அதே பகுதியில் அருள்ஜோதி, சரண்யா தம்பதியினரும் வசித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த 2019-ஆம் ஆண்டு அருள்ஜோதியும், சரண்யாவும் இணைந்து பவானியின் பேத்தியின் திருமணத்திற்காக வைத்திருந்த 4 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் பணத்தை கடனாக வாங்கியுள்ளனர். இதுவரை அவர்கள் கடனை திருப்பி கொடுக்கவில்லை.
இந்நிலையில் உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்ட மூதாட்டி பணத்தை திரும்ப கேட்டபோது அந்த தம்பதியினர் வெளியூருக்கு சென்று விட்டனர். இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மூதாட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் சரண்யாவை கைது செய்தனர். தலைமறைவாக இருக்கும் அவரது கணவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.