Categories
தேசிய செய்திகள்

பேத்தியின் வாயில் சிகரெட்டை திணித்து…. தாத்தா செய்த செயல்…. தாய் சொன்ன பகீர் தகவல்…!!!!!

உத்தர பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் தனது சொந்த பேத்தியை சிகரெட் பிடிக்க வைத்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. வீடியோவில் தாத்தா தனது பேத்தியிடம் சிகரெட் ஒன்றை கொடுத்து புகைக்க சொல்லி கட்டாயப்படுத்துகிறார். அதனை வாங்கிய அந்த சிறுமி, தேர்ந்த சிகரெட் புகைப்பாளர் போல் சிகரெட்டை வாயில் வைத்து புகையை இழுத்து வெளியே விடுகிறது. பின்பு தாத்தாவை பார்த்து சிரிக்கிறது. அவரும் சிரிக்கிறார். அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோ வெளியானை அடுத்து போலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியுள்ளனர்.

இந்த சம்பவம் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்துள்ளது என்று தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் பெற்றோர் ஆகியோரை குழந்தைகள் நலக் குழு முன்பு ஆஜர்படுத்தியுள்ளனர். அப்போது குழந்தையின் தாய், “சிகரெட் பிடிக்கச் சொல்லி குழந்தையை ஏன் கட்டாயப்படுத்துகிறீர்கள்.

எனது குழந்தையை விட்டுவிடுங்கள் என்று கூறி தடுத்து நிறுத்த முயன்றேன். ஆனால் அவர்கள் என்னை மிரட்டினர்” என தெரிவித்துள்ளார். இவரின் இந்த குற்றச்சாட்டை அடுத்து போலிஸார் குழந்தையின் தாத்தா மற்றும் மாமா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |