சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த முதியவருக்கு 20 வருடங்கள் ஜெயில் தண்டனை விதித்து நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள எழுத்தூரில் மணி(65) என்பவர் வசித்து வருகிறார். கடந்த 2021-ஆம் ஆண்டு வீட்டிற்கு முன்பு பேத்தியுடன் விளையாடி கொண்டிருந்த 7 வயது சிறுமியை மணி வீட்டிற்குள் அழைத்து சென்றுள்ளார். இதனை அடுத்து மணி அந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததோடு, இதனை வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதனை அடுத்து சிறுமி நடந்துவற்றை தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விருதாச்சலம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மணியை கைது செய்தனர். இந்த விழக்கினை விசாரித்த கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் மணிக்கு 3000 ரூபாய் அபராதமும், 20 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும் விதித்து அதிரடியாக உத்தரவிட்டது. மேலும் 30 நாட்களுக்குள் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு மாவட்ட குழந்தைகள் நல அலுவலர், மாநில நிதியிலிருந்து 5 லட்ச ரூபாய் இழப்பீடு வழங்கவும் நீதிபதியாக உத்தரவிட்டார்.