உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் பேனர் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக நிகழ்ச்சிகளுக்காக பேனர் வைப்பது, வரவேற்பு வபதாகைகள் வைப்பது பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக்கூடாது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவதாகவும், பேனர்கள் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்துவதோடு சில நேரங்களில் உயிரை பறிக்கும் சோகமும் நடந்துவிடுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
விழுப்புரத்தில் கொடிக்கம்பம் நாட முயன்ற போது சிறுவன் தினேஷ் மின்சாரம் தாக்கி மரணம் அடைந்தது தனக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாகவும் அதில் அவர் தெரிவித்துள்ளார். பேனர் கலாச்சாரம் உள்ளிட்ட ஆடம்பரங்களை பலமுறை கண்டித்த பின்னரும் விரும்பத்தகாத கண்டிக்கத்தக்க செயல் தொடர்வது வருத்தம் அளிக்கிறது. இத்தகைய கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.