நேற்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய ஓ.பன்னீர் செல்வம், சசிகலா அதிமுகவில் சேர்க்கப்படுவாரா? என்று செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ஓபிஎஸ், அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக் கொள்வதும், ஏற்றுக் கொள்ளாததும் மக்கள் விருப்பமாகும் என்று கூறினார். இது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், ஓபிஎஸ் வருகையையொட்டி மதுரையில் அடிக்கப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட பேனர்களில் எடப்பாடி பழனிச்சாமியின் படம் இடம்பெறாதது புதிய குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. ஓபிஎஸ் உடன் செல்லூர் ராஜூ, உதயகுமார் படங்கள் மட்டுமே இருந்தன.