கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் சரவணன் சமீபத்தில் வெளியிட்ட செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, கிருஷ்ணகிரி நகராட்சி எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்கப்பட்டது. ஆனாலும் சிலர் தடையை மீறி பேனர்கள் வைத்த வண்ணம் இருக்கின்றனர். பொது இடங்களில் பேனர்களை தயார் செய்து பொருத்தும் நிறுவனத்தினரும் பேனர்களை வைத்துவருகின்றனர். இனி வரும் காலங்களில் பொது இடங்களில் பேனர்கள் வைக்கும் நடவடிக்கையில் ஈடுபடுபவர்கள் மீது சட்டரீதியாக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பேனர்கள் தயாரிக்கும் மற்றும் பொருத்தும் நிறுவனங்களும் விதிமுறையை மீறக்கூடாது என எச்சரித்துள்ளார்.
Categories