அம்மா எங்கே? என்று கைக்குழந்தை ஏங்கி அழுகாமல் இருக்க வித்தியாசமான முயற்சியில் இறங்கியுள்ளார் பெண் ஒருவர் .
ஜப்பானில் இருக்கும் பெண் ஒருவர் வீட்டில் தான் இல்லாத போது , தனது 1 வயது மகன் தன்னைத் தேடி அழாமல் இருப்பதற்காக தன்னைப்போலவே உருவம் கொண்ட பேனர் ஒன்றை உருவாக்கி வைத்துள்ளார்.
வீட்டின் மையப்பகுதியில் தரையில் அமர்ந்தபடி ஒரு பேனரையும் அதேபோல், சமையலறையில் நின்று கொண்டிருப்பதைப் போன்று ஒரு பேனரையும் வைத்துள்ளார்.
இந்தப் பேனரை பார்க்கும் அந்த குழந்தை, அது பேனர் என்றுகூட தெரியாமல், தன்னுடைய அம்மா தான் இருக்கிறார் என நினைத்து கொண்டு மகிழ்ச்சியில், அழாமல் விளையாடியுள்ளது. இதன் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.