தேனியில் பெரியகுளம் சட்டமன்றத் தொகுதியில் குறிப்பெடுக்க பேனா இல்லாத காரணத்தினால் வாக்குகளை எண்ணுவதற்கு தாமதம் ஏற்பட்டுள்ளது.
தேனியில் 4 சட்டமன்ற தொகுதிகள் அமைந்துள்ளது. இத்தொகுதியில் பதிவான வாக்கு எந்திரங்களை தேனியிலிருக்கும் கொடுவிலார்பட்டியில் அமைந்திருக்கும் தனியார் கல்லூரியில் வைத்து, அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்நிலையில் தபால் வாக்குகளை 8 மணியளவில் எண்ணுவதாகவும், எந்திரங்களில் பதிவான வாக்குகளை 8.30 மணியளவில் எண்ணுவதாக இருந்தது.
ஆனால் பெரியகுளம் தொகுதியில் வேட்பாளர்களினுடைய முகவர்களிடம் குறிப்பெடுப்பதற்கு பேனா இல்லாததால் அங்கு வாக்கு எண்ணிக்கை சற்று தாமதமாக தொடங்கியுள்ளது. அதாவது காவல்துறையினர் பேனாக்களில் கேமரா இருப்பதாக கூறி அதனை பறிமுதல் செய்துள்ளனர். அதன்பின் தேர்தல் பணியில் ஈடுபட வந்த அலுவலர்களும், காவல்துறையினர்களும் முகவர்களுக்கு பேனாவை கொடுத்தபின் 30 நிமிடம் தாமதமாக வாக்குகளை எண்ணும் பணி நடைபெற்றுள்ளது.