திமுக அரசு சார்பில் மெரினா கடற்கரையில் ரூபாய் 80 கோடி மதிப்பீட்டில் பேனா வடிவில் நினைவுச் சின்னம் அமைக்கப்படும் என்று அறிவித்திருந்தது. இந்த திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் சில எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன், முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைப்பது என்பது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.
மேலும் இதை பத்திரிக்கையில் வெளிவந்த செய்தி தான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். கருணாநிதிக்கு பேனா வடிவில் நினைவுச்சின்னம் அமைப்பதற்கு பல தரப்பில் இருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது.