Categories
தேனி மாவட்ட செய்திகள்

பேபி அணையை பலப்படுத்தும் பணிகள் நடக்கிறதா….? முல்லைப் பெரியாறு அணையில் திடீர் ஆய்வு….!!!

முல்லைப் பெரியாறு அணையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டுள்ளனர்.

தமிழக மற்றும் கேரள எல்லையில் முல்லை பெரியாறு அணை அமைந்துள்ளது. இந்த அணையின் மூலமாக ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்கள் பயன்பெறுகிறது. இந்நிலையில் முல்லை பெரியாறு அணையில் 142 அடி வரை தண்ணீரை தேக்கி வைத்துக் கொள்ளலாம் எனவும், பேபி அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்திக் கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் ரூல்கர்வ் என்ற விதியின்படி தற்போது பருவமழைக்கு ஏற்ப அணைகளில் தண்ணீர் தேக்கப்படுகிறது.  அதன்பிறகு  அணையின் நீர்மட்டம் தற்போது 136.25 அடியாக இருக்கும் பட்சத்தில், வினாடிக்கு 1810 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், தமிழகத்திற்கு 933 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

இந்நிலையில் பெரியார்-வைகை வடிநில வட்ட மதுரை மண்டல கண்காணிப்பு பொறியாளராக பழனிச்சாமி என்பவர் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் முல்லை பெரியாறு அணை, பேபி அணை, தேக்கடியில் தண்ணீர் திறக்கும் மதகு, மின் உற்பத்திக்கு ராட்சச குழாய்களில் இருந்து தண்ணீர் வரும் இடங்கள், போர்பே அணை போன்றவற்றை ஆய்வு செய்தார். அப்போது பேபி அணையை பலப்படுத்துவது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், பெறவேண்டிய அனுமதிகள் மற்றும் பரிசீலனைக்காக அனுப்பப்பட்ட அனுமதிகள் போன்றவற்றை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். இதைத்தொடர்ந்து லோயர் கேம்ப் பகுதியில் உள்ள பென்னிகுயிக் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் இந்த ஆய்வின் போது அணையின் செயற்பொறியாளர், உதவி பொறியாளர் மற்றும் அதிகாரிகள் உட்பட பலர் உடன் இருந்தனர்.

Categories

Tech |