பெற்ற தாய்,தன் குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
புதுச்சேரி காவல்துறையில் காவலராக பணிபுரிந்து வருபவர் கணேஷ். இவருக்கு சாந்தி என்பவருடன் திருமணம் நடந்து 6 ஆண்டுகள் ஆகிறது .மேலும் மனைவி சாந்தி தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.
மேலும் இவர்களுக்கு 5 வயதில் பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில் திடீரென கணவன் – மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து மோதலால் சண்டையிட்டு இருவரும் பிரிந்து,தனித்தனியாக வாழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து சாந்தி தனது 5 வயது மகளுடன் வசித்து வரும் நிலையில், சில நாட்களுக்கு முன், சாந்தி குழந்தையை அடித்து துன்புறுத்தும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்க்கும் நெட்டிசன்கள் சாந்தியிடம் இருந்து குழந்தையை மீட்டு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்து வருகின்றனர்.