Categories
சினிமா தமிழ் சினிமா

பேய் படத்தில் நடிக்கும் விமல்… இயக்குனர் யார் தெரியுமா?… வெளியான செம அப்டேட்…!!!

நடிகர் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தமிழ் திரையுலகில் பசங்க படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் விமல். இதை தொடர்ந்து இவர் களவாணி, கேடி பில்லா கில்லாடி ரங்கா, கலகலப்பு, மாப்ள சிங்கம் போன்ற படங்களில் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில் விமல் அடுத்ததாக பேய் படத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. வெங்கடேஷ் இயக்கும் இந்த படத்தில் தம்பி ராமையா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். பாம்பாட்டம், ரஜினி போன்ற படங்களை தயாரித்து வரும் வைத்தியநாதன் பிலிம் கார்டன் பட நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. மேலும் இந்த படத்திற்கு அம்ரீஷ் இசையமைக்கிறார். இந்த படம் குறித்து இயக்குனர் வெங்கடேஷ் ‘இது நான் இயக்கும் முதல் பேய் படம். இதுவரை யாரும் பார்த்திராத ஒரு வித்தியாசமான ஹாரர் படம் .

வெங்கடேஷ் இயக்கத்தில் விமல் நடிக்கும் பேய் படம் Entertainment பொழுதுபோக்கு

தமிழ் சினிமாவில் ஏராளமான பேய் படங்கள் வந்திருக்கின்றன. ஆனால் இந்த படம் வழக்கமான பேய் படம் இல்லை. முற்றிலும் மாறுபட்ட திரைக்கதை இதில் இருக்கும். பேய் பயமுறுத்தும் காட்சிகள் இருந்தாலும் காமெடிக்கும் முக்கியத்துவம் கொடுத்து இந்த படத்தை உருவாக்க இருக்கிறேன். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பை தொடங்கி ஒரே கட்டமாக முடிக்க திட்டமிட்டுள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

Categories

Tech |