Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

அம்மா ஆவி பிடிச்சிருக்கு…. இளம்பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்…. ராமநாதபுரத்தில் பரபரப்பு….!!

ராமநாதபுரத்தில் பேய்பிடித்ததாக கூறி இளம்பெண் மர்மமான முறையில் இறந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் குறவள்ளி கிராமத்தைச் சேர்ந்த தம்பதிகள்  வீரசெல்வம் – கவிதா. இவர்களது  மகள் தாரணி. வீரசெல்வத்தின் மனைவி  கவிதா கடந்த ஒன்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் சில மாதங்களுகு முன்பு தாரணிக்கு  உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்கு கவிதாவின் ஆவி தான் காரணம் என்று சிலர் வீரசெல்வதிடம்  கூறியுள்ளனர். இதை  நம்பிய வீரசெல்வம் தாரணியை திருப்பாலைக்குடி கோடாங்கி, ராமநாதபுரத்தை  சேர்ந்த பெண் பூசாரி ஆகியோரிடம் அழைத்து சென்றுள்ளார். \

அங்கு தாரணியை  பேய் ஓட்டுவதாக கூறி சாட்டை மற்றும் சிறு குச்சியால் அடித்து பரிகாரம் செய்துள்ளனர். இதனால் தாரணி மயங்கியுள்ளார். உடனடியாக தாரணியை உச்சிப்புளி தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டுசென்றுள்ளனர். அங்கு தாரணியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக கூறினர். இதுகுறித்து உச்சிப்புளி காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Categories

Tech |