வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழையூர் கிராமத்தில் ஜோசப் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வேளாங்கண்ணி(25) என்ற மகன் இருந்துள்ளார். இவருக்கு சுகன்யா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு 4 வயதில் பெண் குழந்தை இருக்கிறது. கடந்த 3 மாதங்களாக வேளாங்கண்ணிக்கு மனநலம் பாதிக்கப்பட்டதாக தெரிகிறது. இதனை அடுத்து அப்பகுதி மக்கள் வேளாங்கண்ணிக்கு பேய் பிடித்து இருப்பதாக கூறியதால் குடும்பத்தினர் அவரை பூசாரியிடம் அழைத்து சென்று பூஜை செய்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அப்பகுதியில் இருக்கும் வெப்பமரத்தில் வேளாங்கண்ணி தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்த அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வாலிபரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.