Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

“பேரணாம்பட்டு நகரில் பரவும் டெங்கு காய்ச்சல்”…. தடுக்க நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை…!!!!!!

பேரணாம்பட்டு நகரில் டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை எடுத்துள்ளார்கள்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள பேரணாம்பட்டு பகுதியில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக தொடர் மழை பெய்தது. இதன் காரணமாக நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி கொசு புழுக்கள் உற்பத்தியாகி வருகின்றது. மேலும் நகராட்சியில் குப்பை கிடங்கு இல்லாததனால் சென்ற ஒரு மாதமாக நகரின் பல இடங்களில் குப்பைகள் மழை போல் தேங்கி இருக்கின்றது. மேலும் சென்ற பத்து நாட்களாக பேரணாம்பட்டு நகரில் வைரஸ் காய்ச்சல் மற்றும் டெங்கு காய்ச்சலால் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பாதிக்கப்பட்டு வருகின்றார்கள்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தினமும் 200க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றார்கள். இதில் சுமார் 20 முதல் 30 பேர் வைரஸ் மற்றும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்கள். ஆதலால் தேங்கியுள்ள குப்பைகளை உடனடியாக அகற்றுமாறு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் என்று கண்டறிந்து டெங்கு காய்ச்சல் தடுத்திட நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.

 

Categories

Tech |