அமெரிக்காவில் பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் காரில் பயணித்த போது பயங்கர விபத்து ஏற்பட்டு கார் நொறுங்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த டைகர் வுட்ஸ் என்ற பிரபல கோல்ப் விளையாட்டு வீரர் லாஸ் ஏஞ்சல்ஸ் என்ற நகரில் காரில் சென்று கொண்டிருந்தபோது ரோலிங் ஹில் எஸ்டேட் என்ற பகுதியில் அவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் தடுப்பு வெளியை உடைத்துச் சென்று உருண்டு விழுந்ததில் நொறுங்கியது.
இதுகுறித்து லாஸ் ஏஞ்செல்ஸ் கவுண்டி ஷெரிப் Allex villeneva என்பவர் கூறியதாவது, வாகனம் ஒன்று உருண்டு விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளதாக தகவல் கிடைத்தது. அந்த கார் நொருங்கியதில் டைகர் வுட்ஸ் அதில் சிக்கி கிடந்துள்ளார். மருத்துவக்குழுவினர் மற்றும் தீயணைப்பு துறையினர் டைகர் வுட்ஸை மீட்ட போது அவர் சுயநினைவுடன் இருந்தார். அதன்பின்பு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Our thoughts are with Tiger and his family at this time. We wish him all the very best for his recovery.
— The Open (@TheOpen) February 23, 2021
அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவரின் காயம் மற்றும் அவரின் தற்போதைய நிலை குறித்து எந்த தகவல்களும் தெரிவிக்கப்படவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் பலரும், 16 முறை சாம்பியன் பட்டம் பெற்ற டைகர் வுட்ஸ் விரைவாக குணம் அடைந்து வீடு திரும்ப தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.