Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பேரனுடன் வாழ்ந்து வந்த தந்தை….. முதியவரை அடித்து உதைத்த மகன்…. போலீஸ் நடவடிக்கை…!!

சொத்து தகராறில் மகன் தந்தையை அடித்து உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கண்டிசாலை பகுதியில் பொங்கியான்(70) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு நாகராஜ் என்ற மகனும், ஒரு மகளும் இருந்துள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு மகள் இறந்து விட்டதால் பேரனான மகேஷ் என்பவருடன் பொங்கியான் வசித்து வருகிறார். இந்நிலையில் சொத்துப் பிரச்சினை காரணமாக பொங்கியானுக்கும், நாகராஜூக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

நேற்று முன்தினம் நாகராஜ் தனது தந்தையை சந்தித்து சொத்தை பிரித்து தருமாறு வற்புறுத்தியுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் நாகராஜ் தந்தையை அடித்து உதைத்துள்ளார். இதனால் காயமடைந்த முதியவர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நாகராஜை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |